/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் லைன் மாரியம்மன்பொங்கல் பூச்சாட்டு திருவிழா
/
போலீஸ் லைன் மாரியம்மன்பொங்கல் பூச்சாட்டு திருவிழா
ADDED : மார் 29, 2024 12:53 AM
திருப்பூர்;திருப்பூர், கோர்ட் வீதியில் அமைந்துள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நடப்பாண்டு பொங்கல் பூச்சாட்டு விழா வரும், 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில், 10ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சியும் தொடர்ந்து தினமும் கம்பம் சுற்றியாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 15ம் தேதி, நொய்யல் கரை கருப்பண்ண விநாயகர் கோவிலிலிருந்து அம்மன் கரகம் எடுத்து வருதல், 16ம் தேதி அம்மன் அழைத்தல், 17ம் தேதி மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ம் தேதி, அம்மன் திருவீதியுலாவும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
வரும், 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு சிறப்பு மகா அபிேஷகமும், பகல் 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. வரும் 21ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. பொங்கல் விழா முன்னிட்டு, 2ம் தேதி முதல், 21ம் தேதி வரை, தினமும் பகல் 11:00 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.

