/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்; சுல்தான்பேட்டையில் ஆயத்தப் பணி
/
போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்; சுல்தான்பேட்டையில் ஆயத்தப் பணி
போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்; சுல்தான்பேட்டையில் ஆயத்தப் பணி
போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்; சுல்தான்பேட்டையில் ஆயத்தப் பணி
ADDED : ஜூலை 12, 2024 12:38 AM

பல்லடம் : சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டு, 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த காலத்தில், காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியில், அடிக்கடி திருட்டு, வழிப்பறி, விபத்து உள்ளிட்டவை ஏற்பட்டு வந்தன.
சுல்தான்பேட்டைக்கு தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, கடந்த, 2018ல் சுல்தான்பேட்டையில் தனியாக போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.
தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்காததால், சூலுார் இன்ஸ்பெக்டரே  கவனித்து வருகிறார். ஒரு எஸ்.ஐ., - ஐந்து எஸ்.எஸ்.ஐ., மற்றும் ஏட்டு, கான்ஸ்டபிள், எழுத்தர் என, மொத்தம், 19 போலீசார் இங்கு வேலை பார்க்கின்றனர். ஆரம்பம் முதலே வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அரசு கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
சமீபத்தில், தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நடந்த காவல்துறை மானிய கோரிக்கையில், சுல்தான்பேட்டைக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள, 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த இடம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைப்பது மட்டுமின்றி, இன்ஸ்பெக்டரையும் நியமித்து, புகார்கள், பிரச்னைகளுக்கு இங்கேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

