/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை வாலிபரிடம் பணம் பறித்த போலீஸ் சஸ்பெண்ட்
/
போதை வாலிபரிடம் பணம் பறித்த போலீஸ் சஸ்பெண்ட்
ADDED : ஆக 21, 2024 01:18 AM
திருப்பூர்:சாலையில் மது அருந்திய வாலிபர்களிடம் பணம் பறித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக ஷேக் அப்துல்லா, 30, என்பவர் பணியாற்றுகிறார். இவர் இரு நாட்களுக்கு முன், பி.என்., ரோட்டில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். பணி முடிந்து புறப்பட்ட போது, எஸ்.வி., காலனியில், ரோட்டோரம், இரு வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த போலீஸ்காரர், அவர்களிடம் பேசியவாறு, இருவரின் பாக்கெட்டில் இருந்து, 3,800 ரூபாயை பறித்துக் கொண்டார். இது குறித்து கேட்ட வாலிபர்களை, தாக்கி தப்பினார்.
தகவல் அறிந்த உதவி கமிஷனர் விசாரணை நடத்தி, அறிக்கையை, கமிஷனர் லட்சுமியிடம் சமர்ப்பித்தனர். கமிஷனர் உத்தரவின்படி, ஆயுதப்படை போலீஸ்காரர் ஷேக் அப்துல்லாவை, துணை கமிஷனர் ராஜராஜன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

