/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'படகு சவாரி துவங்கும் முன் மாசுபாடு தடுக்க வேண்டும்'
/
'படகு சவாரி துவங்கும் முன் மாசுபாடு தடுக்க வேண்டும்'
'படகு சவாரி துவங்கும் முன் மாசுபாடு தடுக்க வேண்டும்'
'படகு சவாரி துவங்கும் முன் மாசுபாடு தடுக்க வேண்டும்'
ADDED : ஆக 25, 2024 11:07 PM
திருப்பூர்:மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:
படகு இல்லம் அமைத்து, ஆண்டிபாளையம் குளத்தை, மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக மாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேநேரம், நீர் பாதுகாப்பில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. நல்லம்மன் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலில், மங்கலம், சுல்தான் பேட்டை வழியாக, ஆண்டிபாளையம் குளத்துக்கு தண்ணீர் வருகிறது.
மங்கலம் நால் ரோடு - சுல்தான் பேட்டை ஆகிய இரு இடங்களில், ராஜவாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலக்கிறது. சாக்கடை கழிவுநீரும் கலக்கிறது. குளத்தில் தண்ணீர் அதிகம் உள்ளதால், சாயம் கலப்பது பெரிதாக தெரியவில்லை.
கடந்த 14 ஆண்டுகள் முன்னரே குளத்தில் படகு சவாரி செயல்படுத்தப்பட்டது; போதிய பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டது. மீண்டும் அதே நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
ஆண்டிபாளையம் குளத்துக்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்காலில் சாயக்கழிவு, சாக்கடை கழிவுநீர் கலப்பதை அதிகாரிகள் தடுக்கவேண்டும். இதன் மூலம் குளத்தின் பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்படும்; நீர் மாசுபடுவதை தடுத்துவிட்டு, குளத்தில் படகு சவாரி துவக்கவேண்டும். சப் கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ராஜவாய்க்காலில் வரும் நீரை சுத்திகரித்து, ஆண்டிபாளையம் குளத்தில் கலக்கும்வகையில் தொலைநோக்கு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.