/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
/
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
ADDED : மார் 21, 2024 11:33 AM

அவிநாசி:அவிநாசி, புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிக்கவுண்டம்பாளையத்தில், மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் மாரியம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படும்.
அவ்வகையில், கடந்த, 14ம் தேதி கிராம சாந்தியுடன் பொங்கல் விழா துவங்கியது. இரவு பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, மினி விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அதனைத் தொடர்ந்து, 16ம் தேதி அன்று அம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் அதிகாலை, பூவோடு எடுத்து கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடந்து வந்தது.
நேற்று மாரியம்மன் பொங்கல் விழா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனை வழிபட்டனர். பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. நேற்று மாலை கம்பம், கங்கையில் விடப்பட்டது.இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது.

