/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி கோவில் தேரோட்டம்; தேர் அலங்கரிப்பு பணி தீவிரம்
/
பூண்டி கோவில் தேரோட்டம்; தேர் அலங்கரிப்பு பணி தீவிரம்
பூண்டி கோவில் தேரோட்டம்; தேர் அலங்கரிப்பு பணி தீவிரம்
பூண்டி கோவில் தேரோட்டம்; தேர் அலங்கரிப்பு பணி தீவிரம்
ADDED : மார் 07, 2025 03:47 AM

அனுப்பர்பாளையம்; திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வாக, தேரோட்டம், 12ம் தேதி மாலை நடக்கிறது. தேரோட்டத்தின்போது, ஸ்ரீவிநாயகர் தேர், ஸ்ரீசோமாஸ்கந்தர் தேர், ஸ்ரீசண்முகநாதர் என மூன்று தேர்கள் வடம் ரதவீதிகளில் வலம் வரும். மூன்று தேர் மேற்பகுதியில் தேர்களை அலங்கரிக்கும் வகையில், மீனாட்சி, வீரபாகு, துவார பாலகர் உள்ளிட்ட 22 சுவாமி படங்கள் இடம்பெறும். இதற்காக சுவாமி படங்கள் வரையும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்துக்கு ஐந்து நாளே உள்ளதால், பல ஓவியர்கள் சுவாமி படங்களை வரைந்து, வர்ணம் தீட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.