/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு தபால் வங்கி கணக்கு ;அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்
/
மாணவர்களுக்கு தபால் வங்கி கணக்கு ;அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்
மாணவர்களுக்கு தபால் வங்கி கணக்கு ;அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்
மாணவர்களுக்கு தபால் வங்கி கணக்கு ;அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 25, 2024 01:56 AM
உடுமலை;அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கான அஞ்சலக வங்கிக்கணக்குகள் துவங்குவதற்கான முகாம் துவங்கியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது.
அந்த மாணவர்களுக்கு மட்டுமே, வங்கிக்கணக்கு பராமரிக்கப்பட்டு வந்தது. நடப்பாண்டில், அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக்கணக்கு துவங்குவதற்கு அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதன்படி வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சலக வங்கிக்கணக்கு துவங்குவதற்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும், இதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
பள்ளிகளுக்கு அருகிலுள்ள கிளை தபால் நிலையங்களை அணுகி, அவர்கள் வாயிலாக கணக்கு துவங்குவதற்கான முகாம் நடத்தப்பட வேண்டும்.
அந்த முகாம் நடத்தும் நாளில், மாணவர்கள் தவறாமல் வருகை தருவதையும், பெற்றோரை வைத்து உறுதிசெய்துகொள்ள வேண்டுமென, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், தபால் வங்கி கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.