ADDED : ஆக 08, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், முதுகலை பட்டப்படிப்புக்கான அறிவிப்பு ஜூலை மூன்றாவது வாரம் வெளியிடப்பட்டது.
விண்ணப்ப பதிவு ஜூலை, 27ம் தேதி துவங்கியது. சிக்கண்ணா, எல்.ஆர்.ஜி., உள்ளிட்ட மாவட்டத்தில், முதுகலை பட்டப்படிப்பு உள்ள கல்லுாரிகளில், கல்லுாரி கல்வி இயக்ககத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி, www.thgasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அவகாசம் இன்றுடன் (8ம் தேதியுடன்) முடிவடைகிறது. வரும், 10 அல்லது, 12ம் தேதி தரிவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். வரும் 14ல் சிறப்பு பிரிவுக்கும், வரும் 19ம் தேதி பொதுப்பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.