/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரக்கு 'டெலிவரி'யை நிறுத்திய பவர்டேபிள் உரிமையாளர்கள்
/
சரக்கு 'டெலிவரி'யை நிறுத்திய பவர்டேபிள் உரிமையாளர்கள்
சரக்கு 'டெலிவரி'யை நிறுத்திய பவர்டேபிள் உரிமையாளர்கள்
சரக்கு 'டெலிவரி'யை நிறுத்திய பவர்டேபிள் உரிமையாளர்கள்
ADDED : ஆக 19, 2024 11:56 PM

திருப்பூர்;கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, பவர்டேபிள் சங்கத்தினர் சரக்கு டெலிவரியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில், ஏராளமான உள்நாட்டு பனியன் விற்பனைக்கான நிறுவனங்கள் உள்ளன. அவை, 'ஜாப் ஒர்க்' முறையில், 'பவர்டேபிள்', நிறுவனத்திடம் துணியை வழங்கி, பனியன் மற்றும் ஜட்டி ரகங்கள் தைத்து பெறுகின்றனர்.
பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த, 2022 ஒப்பந்தப்படி, 2024 ஜூன் 6 முதல், நடைமுறை கூலியில் இருந்து, 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்.
ஆனால், 'ஒப்பந்த தேதி முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், சில பெரிய நிறுவனங்கள், கூலி உயர்வை வழங்காமல் உள்ளன' என, பவர் டேபிள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த, 14ம் தேதி பவர்டேபிள் சங்கத்தின் மகாசபை கூடியது.
'வரும், 19ம் தேதிக்குள் கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டு, கூலி உயர்வு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினர்; தவறும்பட்சத்தில், வரும், 19ம் தேதி 'டெலிவரி' செய்வது நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவித்தனர்.
பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், நேற்று, பவர்டேபிள் நிறுவனத்தினர் சரக்கு டெலிவரி மற்றும் கட்டு எடுப்பதை நிறுத்தினர். இதனால், சரக்குகள் தேங்கி வருகின்றன. பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு கிடைக்காத பட்சத்தில், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது என, பவர்டேபிள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

