/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரார்த்தனை தந்தது சிறப்பினை... தேர்வில் சாதிப்பது கொடுப்பினை
/
பிரார்த்தனை தந்தது சிறப்பினை... தேர்வில் சாதிப்பது கொடுப்பினை
பிரார்த்தனை தந்தது சிறப்பினை... தேர்வில் சாதிப்பது கொடுப்பினை
பிரார்த்தனை தந்தது சிறப்பினை... தேர்வில் சாதிப்பது கொடுப்பினை
ADDED : மார் 10, 2025 12:47 AM

திருப்பூர்; பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியருக்கான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது.
திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு நடத்தப்படுகிறது. கடந்த, இரண்டு வாரங்களாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான வழிபாடு நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் யாகம், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
கோவில் பட்டாச்சார்யார்கள், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளை செய்தனர். மாணவ, மாணவியர், 'ஞானானந்த மயம் தேவம்...' என்று துவங்கும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரத்தை ஓதி கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
அறக்கட்டளை நிர்வாகிகள், கோவில் அறங்காவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 16ம் தேதியுடன், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு நிறைவு பெற இருப்பதாக, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.