/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் கோவில்களில் பிரார்த்தனை
/
ஹிந்து முன்னணி சார்பில் கோவில்களில் பிரார்த்தனை
ADDED : மே 09, 2024 04:30 AM

திருப்பூர் : மழை வேண்டி திருப்பூரில் ஹிந்து முன்னணியினர் கோவில்களில் கூட்டு பிரார்த்தனை மேற் கொண்டனர்.
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்பத்தில் இருந்து காப்பாற்ற சித்திரை அமாவாசையன்று கோவில்களில் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது.
அவ்வகையில், அமாவாசையான நேற்று தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணியினர் மழை வேண்டி கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ஹிந்து முன்னணி திருப்பூர் மாநகர் வடக்கு ஒன்றியம் சார்பில், கூட்டு பிரார்த்தனை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேற்று நடந்தது.
மாநில செயலாளர் சேவுகன் தலைமையில், மாவட்ட துணை தலைவர் சசி, மாவட்ட செயலாளர்கள் சிவா, முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் வசந்தி, ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் கார்த்தி, ஒன்றிய பொது செயலாளர் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.