/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
/
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
ADDED : செப் 01, 2024 01:39 AM
பொங்கலுார்;பொங்கலுார் அருகே நாதகவுண்டம்பாளையம் அரசு துவக்க பள்ளியில், 'வருமுன் காப்போம்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. எம்.பி., ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் வரவேற்றார். மருத்துவ பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் போன்றவை வழங்கப்பட்டது. முகாமில் 720 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஐந்து பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ஆனந்தன், பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத் தலைவர் அபிராமி, வடமலைபாளையம் ஊராட்சி தலைவர் மேனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.