/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் முன் திருத்தம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரம்
/
வாக்காளர் பட்டியல் முன் திருத்தம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரம்
வாக்காளர் பட்டியல் முன் திருத்தம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரம்
வாக்காளர் பட்டியல் முன் திருத்தம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரம்
ADDED : ஆக 24, 2024 01:43 AM
உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல், முன் திருத்த பணிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், வரும் 2025 ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளரை பட்டியலில் இணைப்பதற்கான சுருக்கமுறை திருத்தம் - 2025, வரும் அக்., 29 ல் துவங்க உள்ளது.
இதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்., 29ம் தேதி, வெளியிடப்படுகிறது.
இதற்காக, வாக்காளர் பட்டியல் முன் திருத்த பணிகளில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் விவரங்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணியின் போது, குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் உள்ளாரா, இறந்த வாக்காளர் பெயர் நீக்க வேண்டியுள்ளதா, 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர் உள்ளாரா என்கிற விபரங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, 'பி.எல்.ஓ.,' மொபைல் போன் செயலியில் பதிவு செய்கின்றனர்.
அக்., 18ம் தேதி வரை இந்த முன் திருத்த பணிகள் நடைபெறும். அதற்கு பின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, படிவங்கள் அடிப்படையில் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

