/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் சாகுபடிக்கு ஆயத்தம் பருவமழை கைகொடுக்கிறது
/
பயிர் சாகுபடிக்கு ஆயத்தம் பருவமழை கைகொடுக்கிறது
ADDED : ஆக 25, 2024 12:57 AM

திருப்பூர்:தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் முக்கியமான தொழிலாக உள்ள விவசாயத்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆற்று நீர் மற்றும் வாய்க்கால் பாசனம் பெரும் உதவியாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிணறுமற்றும் ஆழ் குழாய் கிணற்று நீர்ப் பாசனம் கை கொடுக்கிறது.
மானாவாரி விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இவற்றுக்கு பருவமழை மட்டுமே கைகொடுக்கின்றன. தற்போது தென் மேற்கு பருவ மழை திருப்பூர் மாவட்டத்தில் ஓரளவு விவசாயத்துக்கு உதவும் வகையில் பெய்துள்ளது.
மானாவாரி விவசாயிகள் இந்த மழையைத் தொடர்ந்து சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிடும் வகையில் பணிகளைத் துவங்கியுள்ளனர்.
அலகுமலை அருகே, மானாவாரி நிலத்தில் சோளம் உள்ளிட்ட பயிர் களைப் பயிரிடும் வகையில் டிராக்டர் மூலம் நிலத்தை தயார்படுத்தும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.

