/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு துாய்மை மதிப்பீடு தயாரிப்பு
/
நல்லாறு துாய்மை மதிப்பீடு தயாரிப்பு
ADDED : ஆக 11, 2024 12:20 AM
திருப்பூர்:திருப்பூர் பகுதியில், நல்லாறு போன்ற நீர்நிலைகள், புதர்மண்டி உருக்குலைந்து கிடக்கின்றன. நகரப்பகுதிகளில் கூட, கழிவுநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கால்வாய் கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதால், ஒரு மணி நேரம் பெய்யும் மழைக்கே நகர வீதிகள், வெள்ளக்காடாக மாறுகின்றன. இவையெல்லாம் கூட பேரிடர் பாதிப்புக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்றது தான் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் சுப்ரமணியம் மற்றும் அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில்,''புதர்மண்டிக் கிடக்கும் நல்லாறை துார்வாரி, சுத்தம் செய்ய வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இதுதொடர்பாக, பவானிசாகர் அணை கோட்ட நீர்வளத்துறை செயற் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'திருமுருகன்பூண்டி நகராட்சி, நல்லாற்றை சுத்தம் செய்வதற்கு, மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்படும் பட்சத்தில், நல்லாறு துார்வாரி சீரமைக்கப்படும்,'' என கூறியுள்ளார்.

