/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பின்னலாடை நகர்' பெருமை; உலகிற்கே புதுமைஐரோப்பிய வர்த்தகர்களை வியக்க வைக்கும் 'டாலர் சிட்டி'
/
'பின்னலாடை நகர்' பெருமை; உலகிற்கே புதுமைஐரோப்பிய வர்த்தகர்களை வியக்க வைக்கும் 'டாலர் சிட்டி'
'பின்னலாடை நகர்' பெருமை; உலகிற்கே புதுமைஐரோப்பிய வர்த்தகர்களை வியக்க வைக்கும் 'டாலர் சிட்டி'
'பின்னலாடை நகர்' பெருமை; உலகிற்கே புதுமைஐரோப்பிய வர்த்தகர்களை வியக்க வைக்கும் 'டாலர் சிட்டி'
ADDED : செப் 01, 2024 01:32 AM
அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளம்குன்றா வளர்ச்சி இல்லாததால், கடந்த காலங்களில், நாடுகள் வளர்ச்சி பெற்றாலும், வளம் அழிந்துவிட்டது; இதனால், பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும், விழிப்பணர்வு ஏற்பட்டுள்ளது.
ஜவுளித்துறையிலும் முழு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது; புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளனர். நாம் முன்கூட்டியே தயாராகாவிட்டால், வாய்ப்புகளை இழக்க நேரிடும். நாம், 15 ஆண்டுகளாக 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம்.
ஐரோப்பிய வர்த்தகர்கள், வியந்து பாராட்டி வருகின்றனர். இவ்வளவு நாட்களாக திருப்பூரின் பெருமைகள் வெளியே தெரியவில்லை. திருப்பூர் என்பது, 'கிரீன் கிளஸ்டர்' என்ற அடையாளத்தை, ஐ.கே.எப்., கண்காட்சி வாயிலாக உலக நாடுகள் அறியும்.
மறுபயன்பாட்டு முறை
வர்த்தகர் கண்காணிக்கலாம்
திருக்குமரன், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்:
'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' என்பது, ஜவுளி கழிவுகளை மறுசுழற்சி செய்வது; பல்வேறு நாடுகளின் 'பிராண்ட்ஸ்' உறுப்பினராக உள்ளனர். ஜவுளித்துறை கழிவுகளை மறுசுழற்சி முறையில், மீண்டும் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். இப்பணிகள் முழுமையாக கண்காணிக்கும் வகையில், ஆவணமாக்கப்பட வேண்டும். 'பாலிபேக்' முதல் அனைத்தும் மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதை வர்த்தகர்கள் நேரடியாக ஆன்லைன் மூலமாக கண்காணிக்கலாம்.
உலக நாடுகளின் கிளஸ்டர்களில்
திருப்பூருக்கு கிடைத்த பெருமை
ஏ.இ.பி.சி., துணை தலைவர் ராமு:
'புளூசைன்' என்ற நிறுவனத்தை, ஐ.கே.எப்., தலைவர் சக்திவேல் இந்தியாவுக்கு கொண்டு வந்து, சாதனை படைத்துள்ளார். பசுமை சார் உற்பத்தியை, தொடர்ச்சியாக கண்காணிக்கும் வசதி இதன் வாயிலாக கிடைக்கும். சுவிட்சர்லாந்து சென்று, மிகுந்த சிரமத்துக்கு இடையே இதனை செய்துள்ளார். உலக நாடுகளில் உள்ள கிளஸ்டர்களில் இல்லாத நிலையில், திருப்பூரில் நாம் செய்துவது பெருமையாக இருக்கிறது. சிறப்பு கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம்
இரு மடங்காக்க இலக்கு
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி:
ஐந்து ஆண்டுகளில், வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்கில், செயல்பட்டு வருகிறோம். வளம் குன்றா வளர்ச்சி கோட்பாடு இருந்தால் மட்டுமே, 2030க்கு பின், ஐரோப்பியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதற்காக, முழு வீச்சில் தயாராகி வருகிறோம்.
பசுமை சார் உற்பத்தியை, 20 ஆண்டுகளாக செய்து வந்தாலும், தற்போதுதான், அவற்றை ஆவணமாக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின், வளரும் பொருளாதாரம், வாங்கும் சக்தி அதிகரித்து வருகிறது. ஏற்றுமதிக்கும், உள்நாட்டு உற்பத்திக்கும் அதிக வேறுபாடு இல்லை. இதனால், பிராண்டட் நிறுவனங்களையும், கண்காட்சிக்கு அழைத்துள்ளோம்.
ஏற்றுமதியாளர்களின் சிறப்புத் திட்டம் 'கிரீன் திருப்பூர், பிராண்ட் திருப்பூர்'
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:
திருப்பூரில், 51வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியில், 8 ஆயிரம் வர்த்தகர்களுக்கும், 10 ஆயிரம் ஏற்றுமதியாளர்களும், 1,500 வர்த்தக முகமைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். 'கிரீன் திருப்பூர், பிராண்ட் திருப்பூர்' என்ற திட்டத்தை கையில் எடுத்தோம்.
'கார்பன் நியூட்ரல்' தான் அடுத்த இலக்கு. 2030ல் ஒட்டுமொத்த திருப்பூர் கிஸ்டர் 'கார்பன் நியூட்ரல்' என்று அறிவிக்கப்பட வேண்டும். புவி மாசுபடாத ஆடை உற்பத்தியால், பல்வேறு சோதனைகளை கடந்து, நான்கு மாதங்களில், 10 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தாண்டு ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.
மறுசுழற்சி மற்றும் சர்குலாரிட்டி என்ற சாதனைகளை ஆவணமாக மாற்றி, அங்கீகாரம் பெற வேண்டும். அதற்காக, சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, திருப்பூர் முதன்மை கிளஸ்டராக அமையும். அதற்கு, 'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' திட்டம் கைகொடுக்கும். வரும் 2027க்கான தேவைகளை தற்போதே முன்னெடுக்க துவங்கிவிட்டோம்.