/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மந்திரி வாய்க்காலில் பாய்ந்த சாயக்கழிவு ஆய்வில் சிக்கிய பிரிண்டிங் நிறுவனங்கள்
/
மந்திரி வாய்க்காலில் பாய்ந்த சாயக்கழிவு ஆய்வில் சிக்கிய பிரிண்டிங் நிறுவனங்கள்
மந்திரி வாய்க்காலில் பாய்ந்த சாயக்கழிவு ஆய்வில் சிக்கிய பிரிண்டிங் நிறுவனங்கள்
மந்திரி வாய்க்காலில் பாய்ந்த சாயக்கழிவு ஆய்வில் சிக்கிய பிரிண்டிங் நிறுவனங்கள்
ADDED : பிப் 26, 2025 04:34 AM

திருப்பூர்; திருப்பூர் மந்திரி வாய்க்காலில் நேற்று இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நடத்திய ஆய்வில், இரண்டு பிரிண்டிங் நிறுவனங்கள் சிக்கின.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் என்னதான் ஆய்வு செய்து, நடடிக்கைகள் எடுத்தாலும், திருப்பூரில், முறைகேடு சாய ஆலைகள், பட்டன்- ஜிப் சாயமேற்றும் நிறுவனங்கள் புதிதுபுதிதாக முளைத்துக்கொண்டே தான் இருக்கின்றன.
குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் வாடகை கட்டடத்தில் இயங்கும் பட்டன் - ஜிப் சாயமேற்றும் நிறுவனங்கள், சுத்திகரிக்காத ரசாயனம் மிகுந்த சாயக்கழிவுநீரை அருகிலுள்ள நீர் நிலைகள், சாக்கடை கால்வாய்களில் திறந்துவிட்டு, சுற்றுச்சூழலை பாழ்படுத்தி வருகின்றன.
திருப்பூர் மந்திரி வாய்க்காலில் அவ்வப்போது சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்திய மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள், லட்சுமி நகரில் இயங்கிய ஒரு முறைகேடு பட்டன் - ஜிப் நிறுவனத்தை கண்டுபிடித்து, மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.
இம்மாதம் கடந்த, 10ம் தேதி, வாலிபாளையம் பகுதிகளில் உள்ள டைஸ் அண்டு கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிறுவனங்கள், சில்லரை வர்த்தக பேக்கிங் செய்வதும்; சாயம் வைக்கப்பட்ட பாக்கெட்கள், அப்பணியில் ஈடுபடும் தொழழிலாளர் கை, கால்களை சுத்தம் செய்யும்போது வெளியேறும் சாயக்கழிவுநீரை, சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது தெரிந்தது. இதனால், டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்கள், பேக்கிங் பிரிவு மற்றும் ஆய்வகத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன்பின் சில நாட்கள் சாயக்கழிவுநீரை காணோம். இந்நிலையில் நேற்று மதியம், ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் அருகே, மந்திரி வாய்க்காலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் பகுதியில் தென்பட்ட சாயக்கழிவுநீர், மந்திரி வாய்க்காலில் பயணித்து, நொய்யலாற்றில் கலந்தது.
மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், நடத்திய ஆய்வில், கொங்கு மெயின் ரோடு, முத்துநகர் பகுதியில் இரண்டு பிரின்டிங் நிறுவனங்கள், அனுமதி பெறாமல் இயங்கியதும்; சுத்திகரிக்காத பிரின்டிங் கழிவுநீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது. அந்நிறுவனங்கள் இயங்கிய வாடகை கட்டடங்களின் மின் இணைப்புகளை துண்டிக்க, கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.