/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவியருக்கு பரிசு
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவியருக்கு பரிசு
ADDED : ஆக 16, 2024 12:15 AM

திருப்பூர் : சுதந்திர தின விழா திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.
மேயர் தினேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றினார். கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பங்களிப்பு வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொறியாளர்கள் என பலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, சமூக நலப்பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நலத்திட்ட உதவிக்காக இந்தியன் வங்கி மூலம் துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக வழங்கினர்.
மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வில் முதல், மூன்று இடங்களை பிடித்த, ஒன்பது மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக முதலிடம் பிடித்த மாணவியருக்கு, 6 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு, 5 ஆயிரம் மற்றும் மூன்றாமிடத்துக்கு, 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பூர் குமரன் மணிமண்டபத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நினைவு துாணுக்கு மரியாதை செலுத்தினர்.

