/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிந்துவெளி பண்பாடு அறிவிப்பு' நுாற்றாண்டு விழா கோலாகலம்
/
'சிந்துவெளி பண்பாடு அறிவிப்பு' நுாற்றாண்டு விழா கோலாகலம்
'சிந்துவெளி பண்பாடு அறிவிப்பு' நுாற்றாண்டு விழா கோலாகலம்
'சிந்துவெளி பண்பாடு அறிவிப்பு' நுாற்றாண்டு விழா கோலாகலம்
ADDED : ஆக 25, 2024 11:13 PM

அவிநாசி:தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்(த.மு.எ.க.ச.,), 'நவீன மனிதர்கள்' அமைப்பு இணைந்து, 'சிந்துவெளி பண்பாடு '
அறிவிக்கப்பட்டதன் நுாற்றாண்டை கொண்டாடும் நிகழ்ச்சி, அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் நடந்தது. சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் தலைமை தாங்கிானர். ரோட்டரி ஆளுநர் - தேர்வு, பூபதி முன்னிலை வகித்தார்.
அவிநாசி த.மு.எ.க.ச., செயலாளர் தினகரன் வரவேற்புரை ஆற்றினார்.
அவிநாசி அரசு கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
த.மு.எ.க.ச., மாநில துணைத்தலைவர் நந்தலாலா 'அசதிக்கு சுடர் தந்த தேன்' என்ற தலைப்பில் அறிமுக உரை வழங்கினார்.
சிந்துவெளி பண்பாட்டு ஆய்வாளரும், முன்னாள் கலெக்டருமான பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
'நவீன மனிதர்கள்' அமைப்பை சேர்ந்த பாரதி சுப்பராயன், த.மு.எ.க.ச., மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
செந்தில்குமார் நன்றி கூறினார். உடுமலை த.மு.எ.க.ச., மக்கள் கலைக்குழு துரையரசன் பாடல்கள்; பொன் மண் மத்தாளம் கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தன.
----
விழாவில் சிந்துவெளி பண்பாட்டு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

