/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'
/
'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'
'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'
'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'
ADDED : ஆக 12, 2024 11:59 PM
திருப்பூர்:உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் கே.எஸ்.சி., பள்ளியில் யானைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசியதாவது:
இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை காக்க முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.