/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போராட்ட அறிவிப்பு: குண்டம் சீரமைப்பு
/
போராட்ட அறிவிப்பு: குண்டம் சீரமைப்பு
ADDED : மார் 21, 2024 11:23 AM

அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுாரில், பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் 26ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு குண்டம் திருவிழாவின்போது, குண்டம் இறங்கிய பக்தர்கள் காயம் அடைந்தனர். இந்த ஆண்டும் அதுபோல் நடந்து விடக்கூடாது. குண்டத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கல்களை அகற்றி, குண்டத்தை பழைய பாரம்பரிய முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பழைய பாரம்பரிய முறைப்படி நடைமுறைப்படுத்தவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நந்து வேலுசாமி, அறிவித்து இருந்தார். இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர் நேற்று குண்டத்தில் பதித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து செங்கல்களையும் அங்கிருந்து, அகற்றினர். அதன்பின், பழைய பாரம்பரிய முறைப்படி குண்டத்தை அமைத்து உள்ளனர்.

