/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் இல்லாமல் தொங்கல் பயணம் தாராபுரம் வழித்தடத்தில் போராட்டம்
/
பஸ் இல்லாமல் தொங்கல் பயணம் தாராபுரம் வழித்தடத்தில் போராட்டம்
பஸ் இல்லாமல் தொங்கல் பயணம் தாராபுரம் வழித்தடத்தில் போராட்டம்
பஸ் இல்லாமல் தொங்கல் பயணம் தாராபுரம் வழித்தடத்தில் போராட்டம்
ADDED : ஆக 29, 2024 02:22 AM

உடுமலை, : உடுமலை - தாராபுரம் வழித்தடத்தில், போதிய பஸ்கள் இயக்கப்படாததால், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பஸ்சில் தொங்கல் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
உடுமலை - தாராபுரம் வழித்தடத்தில், சிவசக்திகாலனி, சேரன்நகர், தாந்தோனி, இந்திராநகர், துங்காவி, சீலநாயக்கன்பட்டி, காரத்தொழுவு உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில், தாராபுரத்துக்கு, உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, 'மப்ஸல்' பஸ்களும், உடுமலை - காரத்தொழுவு வழித்தடத்தில் டவுன் பஸ்சும் அரை மணி நேர இடைவெளியில், இயக்கப்படுகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில், அரசுப்பள்ளிகள், அரசு கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியரும், பணிக்கு வருபவர்களும் அரசு பஸ்சில் தொங்கியபடி பயணிக்க வேண்டியுள்ளது.
போதிய பஸ் இல்லாததால், பல்வேறு பிரச்னைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இது குறித்து, உடுமலை போக்குவரத்து கிளையில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.