/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்
ADDED : ஆக 17, 2024 12:48 AM

உடுமலை:உடுமலையில், மா.கம்யூ., கட்சி சார்பில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். உடுமலை நகர செயலாளர் தண்டபாணி, மடத்துக்குளம் செயலாளர் வடிவேல், குடிமங்கலம் செயலாளர் சசிகலா, மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மத்திய, மாநில அரசுகள், நகர்ப்புற வேலை உறுதியளிப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், விவசாயிகளின் குடியிருப்பு முகவரி மாறியிருந்தாலும் நிலம் எந்த ஊராட்சியில் உள்ளதோ அந்த ஊராட்சி வாயிலாக, விவசாய நிலம் மேம்பாட்டு பணி வேலைக்கு தேர்வு செய்ய வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பாதுகாத்து, வேலை நாளை, 200 நாட்களாகவும், ஊதியம் 600 ரூபாய் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவி தொகை பெறுவோருக்கு வேலை மறுக்க கூடாது. பணித்தளத்தில் குடிநீர், மருந்துப்பெட்டி, நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தளி ரோடு எலையமுத்துார் பிரிவிலிருந்து ஊர்வலமாக வந்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்து, மனு கொடுத்தனர்.

