ADDED : ஜூலை 09, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அவிநாசி ஒன்றியம், ஆலத்துார் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:
ஆலத்துார் ஊராட்சி, 6வது வார்டு வடக்கு வீதியில், சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கழிவுநீர் வீட்டின் முன் தேங்குகின்றன. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பெரியவர்கள், சிறுவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.
மழைக்காலங்களில், கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி, மழைக்கால நோய்கள் எளிதில் பரவும் அபாய நிலை தொடர்கிறது. இதுதொடர்பாக கிராமசபையில் மனு அளித்தும் எந்த பயனுமில்லை. எங்கள் பகுதியில், சாக்கடை கல்வாய் வசதி செய்துதர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.