/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்: தொடர்பு அலுவலர் மொபைல் எண் வெளியீடு
/
தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்: தொடர்பு அலுவலர் மொபைல் எண் வெளியீடு
தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்: தொடர்பு அலுவலர் மொபைல் எண் வெளியீடு
தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்: தொடர்பு அலுவலர் மொபைல் எண் வெளியீடு
ADDED : மார் 29, 2024 10:57 PM
உடுமலை;தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுதிகளில் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக வருவாய் கோட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புக்கு, 94438 28723; கூடுதல் உதவி தேர்தல் அலுவலராக தாசில்தார், 94450 00578 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மடத்துக்குளம் தொகுதிக்கு, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், 73388 01274; கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மடத்துக்குளம் தாசில்தார், 93840 94963 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தேர்தல் தொடர்பான தகவல் பெறவும், புகார் தெரிவிக்கவும், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாக்காளர் விபரம் தெரிந்து கொள்ள, 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

