sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுற்றுலா தலம் குறித்த கையேடு வெளியீடு

/

சுற்றுலா தலம் குறித்த கையேடு வெளியீடு

சுற்றுலா தலம் குறித்த கையேடு வெளியீடு

சுற்றுலா தலம் குறித்த கையேடு வெளியீடு


ADDED : ஜூலை 26, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும் நோக்கில், சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தகவல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரம்பரியமிக்க கோவில்கள், சுற்றுலா தலங்கள், சரணாலயம் என, சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற பல்வேறு இடங்கள் உள்ளன. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சுற்றுலா பயணியரை ஈர்ப்பதற்கும், அவர்களின் பொழுதுபோக்குவதற்குமான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுக்க உள்ள பழமை மிக்க கோவில்கள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், பாரம்பரிய அந்துஸ்து பெற்ற சுற்றுலா தலங்கள், பறவை, விலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றின் புகைப்படம் மற்றும் தகவல் அடங்கிய, நான்கு சுற்றுலா தகவல் கையேடு அச்சிடப்பட்ட, மாவட்ட சுற்றுலா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா அலுவலர்கள் கூறுகையில், 'அலுவலகத்திற்கு வருவோர் மற்றும் அரசின் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது, இந்த கையேடு பொதுமக்களின் பார்வைக்கு காண்பிக்கப்படும். இந்த கையேட்டில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய ததவல் இடம் பெற்றிருப்பது, பார்வைக்கு ரம்மியமாக இருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்க நல்ல பலன் தரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us