/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் குடிநீர் வழங்காத சுத்திகரிப்பு இயந்திரம்
/
பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் குடிநீர் வழங்காத சுத்திகரிப்பு இயந்திரம்
பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் குடிநீர் வழங்காத சுத்திகரிப்பு இயந்திரம்
பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் குடிநீர் வழங்காத சுத்திகரிப்பு இயந்திரம்
ADDED : மார் 03, 2025 04:07 AM

பல்லடம் : பல்லடம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. தினசரி, புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்காக நுாற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக, காத்திருக்கும் அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் போலீஸ் ஸ்டேஷனில் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இருக்கைகள் போதுமானதாக இல்லை.
குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ., இயந்திரத்தில், 'காற்று'தான் வருகிறது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து, புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; போதுமான இருக்கை வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.