/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய மின் இணைப்பு வழங்க இழுத்தடிப்பு; போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்

ADDED : செப் 13, 2024 03:36 AM
பொங்கலுார்: விவசாய மின் இணைப்பு கொடுக்க தாமதம் செய்வதாக கூறி, போராட்டம் நடத்த தயாராவதாக, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
தட்கல் திட்டத்தில், 30 ஆயிரம், பிற திட்டங்களில் ஆறு லட்சம் விவசாயிகள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்கு, 15 நாட்களிலும், வணிகம், தொழிற்சாலைகளுக்கு, 30 நாட்களிலும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகளை, 15 ஆண்டுகளாக காக்க வைப்பது அநியாயம் ஆகும்.
வீடு, தொழில் நிறுவனங்களுக்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளை மட்டும் வஞ்சிக்கிறது. 30 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து, 900 கோடி ரூபாய் பெற்று கொண்டு காலம் தாழ்த்துகிறது. இரண்டு ஆண்டுகளாக ஒரு மின் இணைப்பு கூட கொடுக்கவில்லை.
தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, வேலுார், விழுப்புரம், தஞ்சாவூர், கரூர் என, 11 இடங்களில் உள்ள தலைமை பொறியாளர்களிடம் அக்., மாதம் முதல் நாளில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும். அடுத்து அக்., 22ம் முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.