/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டுக்கொல்லி நோய் இலவச தடுப்பூசி முகாம்
/
ஆட்டுக்கொல்லி நோய் இலவச தடுப்பூசி முகாம்
ADDED : ஏப் 27, 2024 12:49 AM
திருப்பூர்;ஆடுகளை பாதிக்கும் 'பிபிஆர்.,' என்ற ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாக்க, இலவச தடுப்பூசி முகாம், 29ம் தேதி துவங்கி, 30 நாட்களுக்கு நடக்கிறது.
கால்நடை பராமரிப்புத்துறையின், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தில், பி.பி.ஆர்., என்ற ஆட்டு கொல்லி நோயை தடுக்க, இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. வரும், 29ம் தேதி துவங்கி, 30 நாட்களுக்கு, நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம்.
ஆட்டுக்கொல்லி நோய் வேகமாக பரவும் தன்மையுள்ளது; நீர், காற்று, உயிர் திரவங்கள், பண்ணையில் பயன்படுத்தப்படும் கருவிகள் மூலமாகவும் பரவும். வயிற்றுப்போக்கு, கருச்சிதைவு ஏற்பட்டு, உயிருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு, இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.
''மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்கள், நகர்ப்புறம் என, அனைத்து பகுதியிலும், கால்நடை நிலையங்களில், இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இவ்வாய்ப்பை பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பவர்கள், ஆடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம்'' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

