/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கதிரியக்க சிறப்பு பிரிவு
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கதிரியக்க சிறப்பு பிரிவு
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கதிரியக்க சிறப்பு பிரிவு
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கதிரியக்க சிறப்பு பிரிவு
ADDED : மார் 10, 2025 12:45 AM

திருப்பூர்; திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கதிரியக்க சிறப்பு பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திருப்பூர், பூலுவப்பட்டி ரிங் ரோட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, 2024 பிப்., மாதம் திறக்கப் பட்டது. திறப்பு விழாவின் போது, 100 படுக்கைகளுடன் பிரத்யேக வார்டு என அறிவிக்கப்பட்டது.
மருத்துவக் கருவிகள் தருவித்தல், முழுமையாக டாக்டர், பணியாளர் நியமனம், கூடுதலான மருத்துவ வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கார ணங்களால், மருத்துவமனை முழுமையான செயல்பாட்டுக்கு வராமல், புறநோயாளிகள் பிரிவு மட்டும் முழுமையாக செயல்பட்டு வந்தது.
காப்பீடு திட்ட அட்டை, இ.எஸ்.ஐ., விபரங்களுடன் அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மத்திய அரசின் நிதி, 82 கோடி ரூபாயில், மூன்று தளங்களில் மருத்துவமனை கட்டப்பட்டும், இரண்டு தளங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது; ஒரு தளம் அப்படியே இருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில், கதிரியக்கவியல் துறை உருவாக்கப்பட்டு, அதிநவீன கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ரே, அல்டரா ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கு விரிவான, துல்லிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனை கதிரியக்க நோய் கண்டறிதல் துறைத் தலைவர் (பொறுப்பு) டாக்டர் சூரியபிரகாஷ் கதிரியக்கவியல் துறையை திறந்து வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து இ.எஸ்.ஐ., டாக்டர்களுக்கு எடுத்துரைத்தார்.