/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
/
அவிநாசியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 05, 2024 12:12 AM

அவிநாசி;அவிநாசி வட்டார கிராமங்களில் கோடை மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவிநாசி வட்டாரத்தில் நேற்று மதியம் முதலே ஆட்டையாம்பாளையம், சேவூர், தெக்கலுார், கைகாட்டிப்புதுார், பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கரு மேகங்கள் சூழத் தொடங்கியது. அவ்வப்போது, 'ஜில்' என்று காற்றும் வீசியது.
மாலை, ஆலத்துார், பொன்மேடு, லுார்துபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் மிதமான காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. அப்பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நாளில், கோடை வெயில் சுட்டெரித்தபோதிலும் வருண பகவான், மண்ணை குளிர்வித்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.