/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி ரோட்டில் மழைநீர் வடிகால்; அளவீடு செய்து மேற்கொள்ள எதிர்பார்ப்பு
/
அவிநாசி ரோட்டில் மழைநீர் வடிகால்; அளவீடு செய்து மேற்கொள்ள எதிர்பார்ப்பு
அவிநாசி ரோட்டில் மழைநீர் வடிகால்; அளவீடு செய்து மேற்கொள்ள எதிர்பார்ப்பு
அவிநாசி ரோட்டில் மழைநீர் வடிகால்; அளவீடு செய்து மேற்கொள்ள எதிர்பார்ப்பு
ADDED : மார் 07, 2025 03:41 AM

திருப்பூர்; அவிநாசி ரோட்டில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பணியை முறையாக அளவீடு செய்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைத் துறை ரோடு, திருமுருகன்பூண்டி, திருப்பூர் நகர பகுதியைக் கடந்து செல்கிறது. இதில், திருப்பூர் மாநகராட்சி எல்லை வரை மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. மாநகராட்சி எல்லைக்குள் வடிகால் கட்டும் பணி பெரும்பாலான பகுதியில் மேற்கொள்ளாமல் உள்ளது.
பல போராட்டத்துக்கு பின், தற்போது இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கியுள்ளனர். அவ்வகையில் அவிநாசி ரோட்டில், மாநகராட்சி எல்லையாக உள்ள தண்ணீர் பந்தல் காலனி முதல் அனுப்பர்பாளையம் வரையிலான பகுதியில் வடிகால் கட்டும் பணிக்கு குழி தோண்டும் பணி துவங்கியுள்ளது. வடிகால் அமைக்கும் முன்னரே, நெடுஞ்சாலைத்துறை இடத்தை அளவீடு செய்ய வேண்டும். ரோட்டோர ஆக்கிரமிப்பு இருந்தால், அதனை அகற்றிய பின்னரே வடிகால் கட்டுமானப் பணியை மேற்கொாள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதி வார்டு கவுன்சிலர் செல்வராஜ் கூறியதாவது: இப்பகுதியில் நீண்ட நாள் மற்றும் அத்தியாவசியமான கோரிக்கையாக வடிகால் கோரிக்கை இருந்து வந்தது. கவுன்சிலர் என்ற முறையில், நானும், திருப்பூர் எம்.பி., சுப்பராயனும் இது குறித்து மத்திய அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தோம்.
அதனடிப்படையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதில் கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். அதனடிப்படையில், தற்போது பணிகள் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.