/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராஜிவ் பிறந்த நாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்
/
ராஜிவ் பிறந்த நாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்
ADDED : ஆக 20, 2024 11:09 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகர மாவட்ட காங்., கமிட்டி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் குமரன் சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்து, ராஜிவ் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காங்., பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி, ஈஸ்வரன், துணை தலைவர் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* திருமுருகன்பூண்டியில் உள்ள ராஜிவ் சிலைக்கு, வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் பழநியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயலாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.