/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டில் அரிய தகவல்கள்
/
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டில் அரிய தகவல்கள்
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டில் அரிய தகவல்கள்
உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டில் அரிய தகவல்கள்
ADDED : ஆக 25, 2024 12:06 AM

பெருமாநல்லுார், உத்தமலிங்கேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா, 28ம் தேதி நடக்கிறது.
உத்தமசோழர் கட்டிய, பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில், வேளாண்மை, வணிகத்தில் சிறந்து இருந்தையும், கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. கோவில் வளாகத்தில், 18 கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
* உத்தமலிங்கேஸ்வரர் கோவலுக்கு நந்தவனம் அமைக்க, காடையூர் வியாபாரி சிறியான்பிள்ளை, கொங்கு பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி.,1294), நிலத்தை கொடையாக அளித்துள்ளார்.
* அர்த்தமண்டப வடக்கு சுவர் கல்வெட்டில், கி.பி., 1273ம் ஆண்டு கொங்கு பாண்டியன் வீரபாண்டியன் காலத்தில், பரஞ்சேர்வழியை சேர்ந்த வியாபாரி சொக்கன் என்பவரின் மனைவி தேவி, திருவிளக்கு எரிக்க அச்சுக்காசு கொடையத்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
* கி.பி., 1211ம் நுாற்றாண்டில், கொங்கு சோழர் வீரராசேந்திரன் காலத்தில், செங்கப்பள்ளி வீரராசேந்திர பிரம்மராயனின் மனைவி கணவதியாழ்வி, சந்தியாதீபம் எரிக்க பழஞ்சலகை அச்சுக்காசு கொடையளித்துள்ளார்.* கொங்கு பாண்டியன் காலத்து கல்வெட்டில், 'சோழ மண்டலத்து திருக்கண்டியூர் விளக்கத்துரையன் அம்பலவன் பொன்னம்பலக்கூத்தன்' என்பவர், பைரவர் சன்னதி அமைத்து, அச்சுக்காசுகளுடன் அபிேஷக கலசம் அளித்துள்ள செய்தியை அறியமுடிகிறது.
வீரராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:
கோவிலின் கிழக்கே இருந்த குளம் சிதிலமடைந்ததால், கி.பி., 1286ல், எட்டு பேர் அதனை பராமரிக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. குளத்தை செம்மைப்படுத்தியவர்கள், குளத்தின் அருகே உள்ள நிலத்தில் சாகுபடி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. சாகுபடி துவங்கிய, முதல் நான்கு ஆண்டுகளுக்கு வரிவிதிப்பு இல்லை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு வரி; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு வரி; பத்தாவது ஆண்டு துவக்கத்தில் இருந்து வரியை முழுமையாக செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.
---
கோவிலில் உள்ள பழமையான கல்வெட்டு

