/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கார்டுதாரருக்கு அழைப்பு
/
விரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கார்டுதாரருக்கு அழைப்பு
விரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கார்டுதாரருக்கு அழைப்பு
விரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கார்டுதாரருக்கு அழைப்பு
ADDED : மார் 12, 2025 12:41 AM
திருப்பூர்; ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., ரேஷன் அட்டை பெற்றுள்ள குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதில் தற்போது, 86 சதவீதம் மட்டுமே பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுபட்டுள்ள, 14 சதவீத கார்டுகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விரல் ரேகைகளும், ரேஷன் கடையில் உள்ள பி.ஓ.எஸ்., கருவியில் பதிவேற்றப்பட வேண்டும். வரும், 31ம் தேதிக்குள் விடுபட்ட கார்டு குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கைவிரல் ரேகைகளை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.