/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேரிடம் விசாரணை
/
ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேரிடம் விசாரணை
ADDED : மார் 07, 2025 11:10 PM
திருப்பூர்; திருப்பூர், ராயபுரம் மிலிட்டரி காலனி பகுதியில் வீடுகளில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, விற்பனைக்கு காண்டு செல்லப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கார்த்திக், உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில், 450 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி, சிறு பைகளில் கட்டி கொண்டு சென்றது தெரிந்தது. வீடுகளில் இவற்றை குறைந்த விலைக்கு வாங்கி, வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், இருவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.