ADDED : ஆக 30, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ரேஷன் கடைகளில், மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாளில், அடுத்த மாதத்துக்கான பொருள் பெறுதல் ஆகிய பணிகளுக்காக, பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதம், 31ம் தேதி சனிக்கிழமை.
அதற்கு முன்தினமான இன்று ரேஷன் கடைகள் விடுமுறை. செப்., 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மூன்று நாள் தொடர் விடுமுறையால், ரேஷன் நுகர்வோர் சிரமத்தை தவிர்க்க இம்மாதம் 31ம் தேதி(நாளை) சனிக்கிழமை ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை இயக்குனர் மோகன், நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்க பதிவாளர், அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ''இதுகுறித்து அனைத்து கடை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

