/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உண்மையான உழைப்பு; விருதுகள் சாத்தியமாகின்றன
/
உண்மையான உழைப்பு; விருதுகள் சாத்தியமாகின்றன
ADDED : ஏப் 28, 2024 01:27 AM

'உண்மையாக உழைக்கும் ஊழியர்களால் தான் விருதுகள் சாத்தியமாகிறது; வெற்றியும், பாராட் டும் கிடைக்கிறது...''
கடந்த ஓராண்டில், திருப்பூர் கோட்ட அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தபால் அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ்பாபு சொன்ன இந்த வார்த்தைகள், சத்தியமானவை.
''வாடிக்கையாளர் ஆதரவால், திருப்பூர் அஞ்சல் கோட்டம் கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 323 புதிய சேமிப்பு கணக்குகளை துவக்கியுள்ளது; இது, முந்தைய ஆண்டை விட, 38 ஆயிரம் கணக்குகள் கூடுதலாகும். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 10 ஆயிரத்து, 339 புதிய கணக்குகளும், 14 ஆயிரத்து, 448 மகிளா சம்மன் சேமிப்பு திட்ட கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளன.
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மூலம், 14.87 கோடி, கிராமிய தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில், 21.02 கோடி பிரிமியம் தொகை நடப்பாண்டில் ஈட்டப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார் ஜெயராஜ் பாபு.
அதிக சேமிப்பு கணக்குகளை துவங்கிய மேட்டுப்பாளையம் தபால் நிலையம், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக கணக்கு துவங்கிய கரடிவாவி துணை தபால் நிலையம், அதிக ஆதார் கார்டு வழங்கியது மற்றும் பரிவர்த்தனை செய்த திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர் அஞ்சல் நிலைய உதவி கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங், தாராபுரம் உட்கோட்ட ஆய்வாளர் மனோஜ்குமார், திருப்பூர் வடக்கு உட்கோட்ட ஆய்வாளர் ரஞ்சித் உள்ளிட்ட அஞ்சல் அதிகாரிகள், அஞ்சல் ஊழியர், கிராம அஞ்சல் ஊழியர் உட்பட, 97 பேருக்கு விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.  கிட்ஸ் கிளப் குழுமத் தலைவர் மோகன்கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

