/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேட்பாளருக்கு வரவேற்பு போக்குவரத்து பாதிப்பு
/
வேட்பாளருக்கு வரவேற்பு போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 22, 2024 01:18 AM

உடுமலை;உடுமலையில், தி.மு.க., வேட்பாளருக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியால் போக்குவரத்து பாதித்தது.
பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் கயல்விழி, தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமக்கிருஷ்ணன், நகரச்செயலாளர் வேலுச்சாமி, நகராட்சித்தலைவர் மத்தீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அண்ணாதுரை சிலைக்கு, வேட்பாளர் மாலை அணிவித்தார். தேசிய நெடுஞ்சாலையில், பிரதான ரோடுகள் சந்திப்பு பகுதியில், நுாற்றுக்கணக்கானவர்கள் திரண்டு, பட்டாசு வெடித்து, வரவேற்பு அளித்தனர்.
இதனால், இந்த ரோடுகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் அரசியல் கட்சியினர் நிகழ்ச்சிகளை நடத்த அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

