/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்கணும்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்கணும்
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்கணும்
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்கணும்
ADDED : பிப் 21, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்கு அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
பாதசாரிகளும், பாதயாத்திரை பக்தர்களும் அதிக அளவில் இதன் வழியாக செல்கின்றனர். ஆனால் இப்பாலத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இதனால், பாலத்தில், மின்விளக்குகளும், பிரதிபலிப்பான்களையும் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.