/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல அறிவியல் மாநாடு; திருப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்பு
/
மண்டல அறிவியல் மாநாடு; திருப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்பு
மண்டல அறிவியல் மாநாடு; திருப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்பு
மண்டல அறிவியல் மாநாடு; திருப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்பு
ADDED : மார் 15, 2025 12:16 AM
திருப்பூர்; இன்று நடைபெற உள்ள மண்டல அறிவியல் மாநாட்டில், கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பத்து ஆசிரியர்கள் நாமக்கல் சென்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களில், கற்றலை மேம்படுத்த, வானவில் மன்றங்கள் உருவாக்கப்பட் டுள்ளன.
மன்றங்களில் புதுமையாக செயல்படும் ஆசிரியர்களை ஊக்குவிக்க, அறிவியல், கணிதம் ஆசிரியர்கள் மாநாட்டை பள்ளி கல்வித்துறை தமிழகம் முழுதும் நடத்துகிறது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான அறிவியல் ஆசிரியர் ஆய்வு மாநாடு இன்று நாமக்கல்லில் நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க, கற்றல் - கற்பித்தல் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க, திருப்பூர் கல்வி மாவட்டத்தில் இருந்து கணிதம், அறிவியல் ஆசிரியர் பத்து பேர் தேர்வாகியுள்ளனர்.
மண்டல மாநாட்டில் தேர்வாகும் ஆய்வு கட்டுரைகள், வரும், 22ல் சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது, குறிப்பிடத்தக்கது.