/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு; பொருள் வினியோகம் நடைமுறை ஆய்வு
/
ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு; பொருள் வினியோகம் நடைமுறை ஆய்வு
ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு; பொருள் வினியோகம் நடைமுறை ஆய்வு
ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு; பொருள் வினியோகம் நடைமுறை ஆய்வு
ADDED : ஆக 01, 2024 12:41 AM

உடுமலை : உடுமலை பகுதிகளில், ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ரேஷன்கடைகளில், பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு கைரேகை பதிவில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கண் கருவிழி பதிவு இயந்திரம் வாயிலாக வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
உடுமலை தாலுகாவில், 1.10 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு, 131 முழு நேர ரேஷன் கடைகள் மற்றும் 50 பகுதி நேர ரேஷன் கடைகள் வாயிலாக, பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
அதே போல், மடத்துக்குளம் தாலுகாவில், 35 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. 37 ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட் கார்டு நடைமுறைக்கு வந்த நிலையில், பொருட்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, அதற்கான இயந்திரங்கள் ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்தது.
தற்போது, கண் கருவிழி பதிவு மேற்கொள்ளும் வகையில், முழு நேர ரேஷன் கடைகளுக்கு இயந்திரங்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கண் கருவிழி பதிவு இயந்திரம் வாயிலாக, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் இருந்ததால், தற்போது கருவிழி பதிவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முழு நேர ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் உள்ளது.
கருவிழி பதிவிலும் சிக்கல் ஏற்பட்டால், கைரேகை பதிவு வாயிலாகவும், பொருட்கள் வழங்க முடியும். தற்போது புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், புகார்கள் வர வில்லை, என குடிமைப்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கண் கருவிழி பதிவு குறித்து, போடிபட்டி ரேஷன் கடையில், கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.