/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு; நல வாரிய பதிவு மறுப்பு கட்டுமானத் தொழிலாளர் பிரச்னைகள் ஏராளம்
/
ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு; நல வாரிய பதிவு மறுப்பு கட்டுமானத் தொழிலாளர் பிரச்னைகள் ஏராளம்
ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு; நல வாரிய பதிவு மறுப்பு கட்டுமானத் தொழிலாளர் பிரச்னைகள் ஏராளம்
ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு; நல வாரிய பதிவு மறுப்பு கட்டுமானத் தொழிலாளர் பிரச்னைகள் ஏராளம்
ADDED : ஆக 09, 2024 02:19 AM

திருப்பூர்;கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவரிடம், தொழிற்சங்க பிரதிநிதிகள், பிரச்னைகளை கொட்டித்தீர்த்தனர்.
கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமை வகித்தார்.தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டுமான தொழிற் சங்க பிரதிநிதிகள், நலவாரியம் சார்ந்த கோரிக்கைகள், உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசினர்.
சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,):
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலளர்களுக்கு விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ, உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவ சிகிச்சை பெற நிதியுதவி வழங்கப்படுவதில்லை. கட்டுமான தொழிலாளர் மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக, இ.எஸ்.ஐ.,-ல் சேர்க்கவேண்டும். மாத ஓய்வூதியத்தை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மகளிர் உரிமை தொகை பெறுவதை காரணம்காட்டி, ஓய்வூதியம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
சம்பத் (சி.ஐ.டி.யு.,): ஒரு தொழிலாளி பத்து ஆண்டுகளுக்கு முன் பி.எப்.,- ல் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, வீட்டில் மெஷின்களை வைத்து தையல் ஜாப்ஒர்க் செய்து வருகிறார். பத்து ஆண்டுக்கு முன் பி.எப்.,-ல் சேர்க்கப்பட்டதை காரணம்காட்டி, அவரை நலவாரியத்தில் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது.
நலவாரிய அதிகாரிகள், விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தவறுகளையும் ஆராய்ந்து ஒரே முறை தெரிவிப்பதில்லை. திருத்தம் செய்தது சமர்ப்பித்தபின், அடுத்தடுத்த தவறுகளை சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், வீண் காலதாமதமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
வாக்குவாதத்தால் சலசலப்பு
---------------------
தொ.மு.ச., பிரதிநிதி கிருஷ்ணசாமி பேசுகையில், ''நலவாரிய சர்வர் சிறப்பாக செயல்படுகிறது. இ.எஸ்.ஐ.,-ல் கட்டுமான தொழிலாளரை எவ்வாறு இணைக்க முடியும்; தொழில்முனைவோர் தரப்பில் யார் காப்பீட்டு தொகை செலுத்துவது?,'' என்றார்.
இதற்கு, மற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் ஒருசேர எழுந்து நின்று, 'எங்கள் கேள்விகளுக்கு நலவாரிய தலைவர் தான் பதிலளிக்க வேண்டும். பதில் சொல்ல நீங்கள் யார்? உங்கள் அரசை குற்றம் சொல்வதால் நீங்கள் இப்படி பதில் சொல்லாதீர்கள்,' என வாக்குவாதம் செய்தனர். இதனால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
நலவாரிய குழு உறுப்பினர் குமார்: கடந்தாண்டு அளித்த வாக்குறுதிப்படி, நடப்பாண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் பெற்றுத்தர நலவாரிய தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் நேரடியாக பேசவேண்டும்.
இவ்வாறு, தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசினர்.
----
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்,கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம், கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் நடந்தது.