ADDED : ஆக 06, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான வயநாடு மக்களுக்கு உதவும் வகையில் மளிகை, துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவா பாரதி, ப்ரேரணா அறக்கட்டளை சார்பில், சேகரித்து அனுப்பப்பட்டு வருகிறது.
நேற்று இரவு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் லாரி திருப்பூர் சிவாஜி மந்திரில் இருந்து வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 3.5 டன் அரிசி, வாட்டர் பாட்டில், ஆயத்த ஆடைகள், 4 ஆயிரம், 800 பெட்ஷீட், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள்.
லாரியை, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, ப்ரேரணா அறக்கட்டளை செயலாளர் கயிலைராஜன், பொருளாளர் மோகனசுந்தரம், சேவா பாரதி கோட்ட தலைவர் விஜய குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட அமைப்பாளர் ஆனந்த் கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.