/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு ரோட்டரி சார்பில் நீலகிரிக்கு நிவாரண பொருள்
/
தெற்கு ரோட்டரி சார்பில் நீலகிரிக்கு நிவாரண பொருள்
ADDED : ஜூலை 21, 2024 12:39 AM

திருப்பூர்;நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை வழங்க ரோட்டரி கவர்னர் சுரேஷ்பாபு, ரோட்டரி சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். உதவி கவர்னர் சிவபாலன் தலைமையில், திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதி ரோட்டரி அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவ்வகையில் 7.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
பொருட்கள் வாகனம் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராம்குமார் பாலாஜி, ராமசாமி, பிரபு, ரோட்டரி நிர்வாகிகள் சக்திவேல், பிரபாகரன், மூர்த்தி, முத்துசாமி உள்ளிட்டோர் அனுப்பி வைத்தனர். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இப்பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.