/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காது குறைபாடுக்கு தீர்வு 'மெட் ெஹல்ப்' முகாம்
/
காது குறைபாடுக்கு தீர்வு 'மெட் ெஹல்ப்' முகாம்
ADDED : ஆக 15, 2024 11:52 PM

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோட்டில் இயங்கி வரும், மெட் ெஹல்ப் காது பரிசோதனை மையத்தில், காது பரிசோதனை மற்றும் காது கேளாதோருக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
நம் நாட்டின், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மையத்தில், நேற்று துவங்கி, நாளை (17ம் தேதி) வரை, இலவச காது பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், குறைபாடு உள்ள அனைவருக்கும், இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய காது கேட்கும் கருவிகள், 10 முதல், 20 சதவீத தள்ளுபடி விலையில் வழங்குகிறோம். பழைய கருவிகளை மாற்றி, அதி நவீன புளுடூத் வசதியுடன் கூடிய காது கேட்கும் கருவி வாங்கும் 'எக்ஸ்சேன்ச்' வசதியும் உண்டு.
முகாமில், பெரியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை உண்டு. மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், 90431 - 77951 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

