/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முத்தமிழ் முருகன் மாநாடு சென்று திரும்பிய பள்ளி வாகனம் பழுது; அதிகாரி உதவிக்கரம்

ADDED : ஆக 25, 2024 12:25 AM
திருப்பூர்:அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பள்ளி வாகனம் பழுதடைந்தது. இதையறிந்த தாராபுரம் டிப்போ அதிகாரி, மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.
'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு -2024'
பழநியில் நேற்று துவங்கியது. திருப்பூர் அருகேயுள்ள சோமனுாரில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், வாழை தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என, 60 பேர் தனியார் பள்ளி பஸ்சில், மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் பழுதானது. பள்ளி தரப்பில், தாராபுரம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் கணேசனிடம் தெரிவித்தனர். உடனே, மாற்று பஸ் ஏற்பாடு செய்து, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக சோமனுாருக்கு அனுப்பி வைத்தார்.