ADDED : ஜூன் 26, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசியில் நடந்த ஜமாபந்தியில், சமூக நல பாதுகாப்புத்துறை தனித்துணை வட்டாட்சியர் குமாரராஜாவிடம் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் அளிக்கப்பட்ட மனு:
அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும். அவிநாசி - தெக்கலுார் 29ம் நம்பர் டவுன் பஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்குவதில்லை. தொழிலாளர், மாணவர் பாதிக்கப்படுகின்றனர். பஸ் இயக்கப்பட வேண்டும். அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபாதை மேம்பாலம் அமைக்க ஒரு பகுதியில்குழி தோண்டி பல நாட்களாக வேலை நடைபெறாமல் உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாமல் பொதுமக்கள் விழுந்து சிறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது.பணிகளை உடனே துவங்க வேண்டும்.