ADDED : ஆக 27, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025ல், சில பணிகள் மேற்கெள்ளப்பட உள்ளன. அவ்வகையில், திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு, வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் விவரம் சரிபார்ப்பர். ஓட்டுச்சாவடியை பகுப்பாய்வு செய்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள குறைபாடுகளை சரி செய்தல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்துதல், பட்டியலை செம்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால் செயலி உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளார்.