/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
/
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 19, 2024 07:00 AM

பல்லடம்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை போன்று ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. இதே போல, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:
நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்ட போதும், முன்னாள் முதல்வர் பழனிசாமி திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கினார்.
கடந்த ஆட்சியிலேயே, 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல், நீண்ட காலமாக கிடப்பில் உள்ள ஆனைமலை - நல்லாறு திட்டத்தையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:
கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டத்துக்கு கடந்த ஆட்சி காலத்தில் தீர்வு கிடைத்தது.
இத்திட்டத்தில் விடுபட்டுள்ள 1,300க்கும் மேற்பட்ட குளம் - குட்டைகளை இதில் இணைக்க வேண்டும். இதேபோல், ஆனைமலை - நல்லாறு திட்டத்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி வளர்ச்சி பெறும்.
முன்னாள் முதல்வர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக, 4.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும். ஆனைமலை - நல்லாறு திட்டத்தையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

